கை எழுத்து அழகாக இருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே...
நீ ஒன்றும் வள்ளுவனுக்கு
எழுத கற்று தர போவதில்லை...
அமைதியில் உன்னை வெள்ள யாராலும் இயலாது என்று
திமிர் கொள்ளாதே...
நடு கடலுக்கு உயிர் இருந்தால்
அது உன் அமைதிக்கு சவால்
விடும்...
நட்பிற்கு இலக்கணம் வகுக்க பிறந்திருக்கிறாய் என்று
மெச்சி
கொள்ளாதே...
ஔவ்வை-அதியமான்,பாரி-கபிலர்
போன்றவர்களின் நட்பிற்கு
ஒரு படி கீழே தான் நீ நிற்கிறாய்...
பொறுமையின் சிகரம் தொட்டு விட்டதாக
கர்வம் கொள்ளாதே...
காந்தி, புத்தர்
போன்றவர்கள் வாழ்ந்த மண்ணில் தான் நீயும் பிறந்திருக்கிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்...
இறுதியாக,
யாருக்கும் வாய்க்க பெறாத நண்பர்களின் நட்பு
உனக்கு கிடைத்து விட்டதாக எண்ணி
மகிழ்ச்சி கொள்ளாதே...
நாங்கள் பெற்ற தோழியின் நட்பை விட சிறப்பு வாய்ந்த ஒரு நட்பை
நீ
பெற்றுவிடவில்லை...
-மகா
குறிப்பு: என் தோழியின் பிறந்தநாளுக்கு நான் அளித்த கவிதை பரிசு...
No comments:
Post a Comment