Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Wednesday, October 29, 2014

பொற்காலம்!!!


திருவிழா கூட்ட சாலையிலே,

வட்ட நிலா வேளையிலே ,

குளிர் காற்று வீசையிலே,

ராட்டினங்கள் சுற்றும் ஓசையிலே,

பொம்மை கடை காரன் 

அய்யா வாங்க, 

அம்மா வாங்க. 

கலர் பொம்ம வேணுமா, 

கரடி பொம்ம வேணுமா, 

மனுச பொம்ம வேணுமா என கூவையிலே,

வான வேடிக்கைகளை பார்த்து கொண்டு,

பஞ்சு மிட்டாய் ருசித்து கொண்டு,

தந்தை சுண்டு விரல் பிடியில் இருந்து கொண்டு,

அப்பா ரெட் கலர் பலூன் வேணும் 

என்று அடம் பிடித்து கேட்ட காலம்


பொற்காலம்...  

Wednesday, October 22, 2014

என்ன தவம் செய்தேனோ!!!

அம்மா!!!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உன் மடியில் நான் உறங்க,
    என் உறக்கத்திற்கு நீ கண் விழிக்க,
    உன் கையால் நிலாச்சோறு உண்ண,
    எனக்கு ஆடை அனிவித்து நீ அழகு பார்க்க,
    என் நா உன்னை அம்மாவென்று அழைக்க…..



அப்பா!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உங்கள் கரம் பிடித்து நடை பழக,
    உங்கள் உபந்நியாசங்களை கேட்டு நடக்க,
    உங்கள் வியர்வையை சோறாக்கி அம்மா எனக்கு ஊட்ட,

    என் தேவைகளை நான் கேட்காமலே   நீங்கள்  புரிந்து  கொள்ள…..

-மகா