Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Wednesday, October 22, 2014

கவிப்பரிசு!!!


பெற்றவர்களை பேணி போற்றும் அன்பை
உன்னை  கண்டு  தெரிந்து கொண்டோம்…!!!

மற்றவர்களை மனிதத்துவத்துடன் அணுகும் பண்பை
உன்னிடமே புரிந்து கொண்டோம்...!!!

கல்வி கற்றவர்களின் மகத்துவத்தை
உனை கண்டு தெளிந்து கொண்டோம்...!!!

நட்பென்னும் அற்புதத்தின் இலக்கணப் பகுதியில்,
நீயும் ஒருவனாக நிற்பது கண்டு பெருமை கொள்கிறோம்...!!!

எங்களுக்கெல்லாம் சான்றோனாக திகழ்ந்து,
உன் தாய்க்கு ஈன்ற பொழுதினும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறாய்...!!!

வெற்றி உன் தலையில் ஏறியதும் இல்லை,
தோல்வி உன்னை தரையில் வீழ்த்தியதும் இல்லை... !!!

எங்கள் உயிர் உள்ள வரை நல்ல நண்பனாக இரு ,
உன் உயிர் உள்ள வரை நன்மனிதனாக இரு...!!! 
                                    
-மகா

குறிப்பு: நண்பனின் பிறந்தநாளுக்கு அளித்த கவிப்பரிசு... 


நண்பனுக்கு மரியாதை!!!

என் நண்பனிடமிருந்து 

மரியாதையை கற்கிறேன்,

என் தந்தையை கண்டதும் 

எனக்கு முன் அவன்

எழுந்து நின்று கொள்ளும் பொது...  



பெரியோர்களின் மீது அவனுக்குள்ள மரியாதை 

அவன் மீது எனக்கு மரியாதை ஏற்பட காரணம் ஆகிறது!!!

-மகா