Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Saturday, October 25, 2014

பெண்!!!



வெண்ணிலவு சென்று தினம் வெள்ளை நிலா சோறு ஊட்டினாள் அன்னை,

கண்ணுறங்கும் வேலை வரை கதை கூறி சீராட்டினாள் அக்கா,

கல்வி தனை கண்ணாக போற்ற வேண்டும் என்று உணர வைத்தாள் ஆசிரியை,

வாழ்வில் உணர்வுகளுக்கு விளக்கம் கொடுத்தாள் தோழி,

அவற்றிர்க்கு உயிர் கொடுத்தாள் காதலி,

மொழியில் கூட தாய் மொழியே சிறந்தது,

ஆறுகள் கூட பெண்ணின் பெயர் கொண்டே சேவை புரிகிறது...

பெண்ணே, உனக்கு இதனை பரிணாமமா?

பெண் என்ற ஒருத்தி இல்லாமல் போய் இருந்தால்

மனிதர்கள் மனிதர்களாக இருந்திருக்க முடியுமோ?


-மகா 

Friday, October 24, 2014

புதுமை!!!



பெண்!!!

எத்தனை புதுமைகள்...

உன் புதுமைகளை விளக்க எத்தனை கவிதைகள்....

நீ நீயாக இருக்கும் வரை தீ கூட நீராகும் புதுமை...

நீ தீயாக பார்த்த பார்வையில் மதுரை தீ பற்றி எறிந்த கதை புதுமை...

உன் உரிமைக்காக போராடும் பொது நீ பேசும் பெண்ணியம் புதுமை...

பெண்ணியம் பேசும் அதே நேரம் நீ காக்கும் கண்ணியம் புதுமை...

விடை இல்லா பல விதிகளுக்கு, வீதி விலக்காய் விளங்கும் உன் வாழ்வு புதுமை...

இந்த கவி கொண்ட பதுமை,

இப்புவி கண்ட புதுமை...  

-மகா