வட்ட நிலா வேளையிலே ,
குளிர் காற்று வீசையிலே,
ராட்டினங்கள் சுற்றும் ஓசையிலே,
பொம்மை கடை காரன்
‘அய்யா வாங்க,
அம்மா வாங்க.
கலர் பொம்ம வேணுமா,
கரடி பொம்ம வேணுமா,
மனுச பொம்ம வேணுமா’ என கூவையிலே,
வான வேடிக்கைகளை பார்த்து கொண்டு,
பஞ்சு மிட்டாய் ருசித்து கொண்டு,
தந்தை சுண்டு விரல் பிடியில் இருந்து கொண்டு,
‘அப்பா ரெட் கலர் பலூன் வேணும்’
என்று அடம் பிடித்து கேட்ட காலம்
பொற்காலம்...
