Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, October 22, 2014

திருத்தி எழுதிய ஆசைகள்!!!

கொட்டென்று கொட்டிய மழைதனில் 

திளைத்த பூக்களை, 

சட்டென்று முத்தமிட ஆசை... 


சில்லென்று வீசும் காற்றின் இன்பத்தை 

என் சொல் கொண்டு உணர வைக்க ஆசை... 


நான் எழுதும் கவிதைகளை 

நால்வரேனும் படித்து, 

மூவரேனும் திளைத்து, 

இருவரேனும் சிந்தித்து, 

ஒருவரேனும் உணர ஆசை.... 


மழலையின் சிரிப்பிற்காக 

மலைகளை குடைய ஆசை... 


மனம் விட்டு சிரிக்கும் தருணம் 

தினம் பெற்று மகிழ ஆசை... 


பறக்கும் பட்டாம்பூச்சியின் பின்னே சென்று 

அதன் சுதந்திரத்தை ரசிக்க ஆசை... 


கடற்கரையில் அமர்ந்து 

என் கவிதைகளை படிக்க ஆசை... 


என் புலம்பல்களை படித்து படித்து 

அதன் அழகில் சிரித்து மகிழ ஆசை... 


-ஆசைகள் பிறக்கும்

-மகா 
  

குறிப்பு: மனிதனின் ஆசைகள் அளவற்றது... நானும் மனித சாயல் கொண்டவன் ஆதலால் என் ஆசை கவிதையும் அளவற்றது... இது தொடர்ந்து கொண்டே போகும்... 

அவள் சிரிப்பு-என் கவிதை!!!

அவள் சிரிப்பிற்காக நான் சிந்திய எழுத்துக்கள் 

அழகிய உணர்வுகள் ஆகின்றன... 

அதை படித்து விட்டு அவள் உதிர்க்கும் சிரிப்பு 

அழகிய கவிதை ஆகிறது... 

-மகா  

விதி விலக்கு இல்லை!!!

            
              எவரும் பிறவி கவிஞர்கள் இல்லை, 

              எவர் இரத்ததிலும் எழுத்து 

              பிறக்கும் முன் ஊருவது இல்லை, 

              எவருக்கும் கற்பனை திறன் 

               கற்பிக்க படுவது இல்லை, 

                நான் ஒன்றும் இதற்கு 

                விதி விலக்கு இல்லை!!!


-மகா