Friday, October 24, 2014

எழுதுகிறேன்!!!


கவிஞன் நான் கண்ட பெண் பற்றி கவிதை ஒன்று எழுதுகிறேன்...

கவி உலகு பார்த்திராத கவி பொருள் என்று எண்ணி எழுதுகிறேன்...


அவளை பற்றி எழுத முனையும் பொது திகைக்கிறேன்...
அவளுக்கு இயற்கயை உவமிப்பதா,
இல்லை அவளை இயற்கைக்கு உவமிப்பதா என்று....
 

எழுதுகிறேன்!!!
இதென்ன??
வாழ்க்கையின் ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில்  
மனதிற்கும் அறிவிற்கும் சிற்சில உவமை போராட்டமோ....
அல்லது விரலுக்கும் எழுத்தாணிக்கும் நடுவில் சில பல எழுத்து போராட்டமோ...


எழுதுகிறேன்...
இந்த கவிதையை வாசிக்கும் போது ,இந்த கவிதை மீது உங்களுக்கு காதல் வரும்....
இதனை உணரும் போது அந்த பெண் மீது காதல் வந்துவிடும்...


இதோ எழுதுகிறேன்....
சில்லென்று தூவிடும் மழை சாரல் உணர வேண்டுமா?
சிற்றின்ப நதியில் சிறு நேரம் திளைக்க வேண்டுமா?
சிலைமகள் அவள் சிரிப்பை ஒரு  முறை பாருங்கள்...


பெய்யென்று பெய்யும் மழை மேகத்தின் மேல் நின்று அதனை ரசிக்க ஆசையா?
கூவுகின்ற குயிலை கூவ சொல்லி மகிழ ஆசையா ?
குயில் மகள் மழலை பேச்சை தட்டி கழிக்காமல் கேளுங்கள்...


மனதிற்குள்ளே ஒரு நொடி சுக மின்சாரம் பாய வேண்டுமா??
வலி தராமல் உயிர் பறிக்கும் ஆயுதத்தை  காண  வேண்டுமா?
பென்னவள் கண்களை  ஒரு நொடி நேரில் பாருங்கள்...


பட்டாம்பூச்சி  சிறகடித்து  பறக்கும் அழகை ரசிப்பீர்களா ?
அப்படியானால் கண்மகள் கண் இமைகளின் அசைவுகளையும் ரசிப்பீர்கள்...


புதிதாய் மலர்த்து விரிந்த மலர் தனை பணி துளியோடு கண்டு திளைக்க ஆசையா...
 (இவள் உதடுகள் அதற்கு உவமை...)


ஆழ்கடல் ஆழம் அறிய முனையும் அறிஞரா நீங்கள்? 
இதோ நீங்கள் அறிந்து ஆராய ஒரு ஆழ்கடல் இருக்கிறது.. (அவள் மனம்)...


மந்திர தந்திரங்களில் நம்பிக்கை உண்டா?
நம்புங்கள்... அவள் விரல் கொண்டு தடவினால்
எந்த உடல் காயமும் ஆறி விடும்  அற்புதம்....  
அவள் கை கொண்டு தலை வருடி விட்டால் 
எந்த மன காயமும் ஆறி விடும் அற்புதம்...
மந்திர கோலோடு  பிறந்தவள் போலும்...


கருமை இரவில் நிலவு வீசும் குளிர்ச்சியை
அவள் கருமை நிறை கார்கூந்தல் வீசும்...  

பென்னவள் விடும் மூச்சு காற்றை 
கோப்பை ஒன்றில் சேமித்து வைத்தால் 
அது எளிதில் கிடைக்காத பொக்கிஷம் ஆகும்...

அவள் அடி பாதம் தடவி பாருங்கள்...
அதை விட மென்மையான பூ இதழ் ஒன்று 
உலகில் இருக்குமோ என வியப்பீர்...

சிக்கென்ற இடையும்,
சிங்கார நடையும் ,
இந்த சிங்காரிக்கு மட்டுமே வாய்த்தது

உவமைகளுக்கு கூட பஞ்சம் வருகிறது இந்த பெண்ணை எழுதும் பொழுது...   


எழுதுகிறேன்...
அவளை எழுதுவதால் எனக்கு அவள் மீது காதல் என்று அர்த்த படுவதில்லை...
அழகை ரசிக்காத கவிஞன், கவிஞன் என போற்ற படுவதில்லை...  

எழுதுகிறேன்....

                                                -வெ.மகாதேவன்  

1 comment: