Wednesday, October 22, 2014

காதல் போலும்...


காதலுக்கு முன்:
அறிவு:"கண்ணை கட்டி காட்டில் விடும் கண்ணாம்பூச்சி ஆட்டம் இது.."
மனம்:"கண் இல்லாமல் ஆட கூடிய சொர்க லோக தோட்டம் இது..."

"வில்லன் அவன் பேச்சை கேட்டு வீண் வம்பில் மாட்டாதே". 
"வெள்ளை குணம் கொண்ட என்னை வில்லன் என எண்ணாதே". 

"வெட்டவெளி பார்க்க வைக்கும், வெட்கத்தோடு நடக்க வைக்கும்". 
"வெட்கம் ஒன்றும் துக்கம் இல்லை, அதை கட்டி போட தேவை இல்லை". 

"கிறுக்கு புடிக்க வைத்து உன்னை இழுத்து சேற்றில் தள்ளி விடும்".
"பட்டாம்பூச்சி போல் பறக்கும் சுகம் உனக்கு வந்து விடும்".

"கத்தி போன்ற கண்கள் உன்னை கட்டிப்போட்டு கொன்று விடும்".
"கட்டி போட்ட கண்களை காதல் கட்டவிழ்த்து வென்று விடும்".

"இயல்பான விஷயங்களுக்கு மெருகேற்றி உன்னை அடிமையாக்கி விடும்".
"அந்த அந்தி, வானம், நிலா, மழை போன்றவைகள் இயல்பானவை அல்ல... அவற்றிற்கு அடிமையாவது தான் இயல்பான விஷயம்".

"நீ வாழ போகும் வாழ்க்கை, நீ அடைய ஆசை படும் சந்தோஷம், உன் வாழ்வில் எட்ட துடிக்கும் உயரம், இவை அனைத்தையும் பெற போராட வேண்டி இருக்கும்... உன் பிறப்பு போல் இறப்பு இனிமையாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லை".
"போராட பிறந்தவன் தான் மனிதன்... போராடி அடைவது தான் வாழ்க்கை... அது தான் உண்மையாண சந்தோஷம்".

மனம் வெற்றி பெற்றதுமனதின் ஆட்சி நடைபெற்றது...


காதலுக்கு பின்...

அறிவு: "அய்யோ!!! கண்டவையெல்லாம் அழகு என்று எண்ணி ரசித்த ரசிகன் எங்கே?
காரணங்கள் இல்லாமல் சிறிது மகிழ்ந்த சிறுவனை இப்பொழுது காரணம் இருந்தாலும் சிரிக்க முடியாதபடி செய்தது யார்? ஏய் மனமே... இது உன் வேலையா… ?  
ஆனந்த கண்ணீரால் ஆனந்தம் அடைந்து கொண்டிருந்த இவனை கண்ணீர் வற்றி போகும் அளவிற்கு அழ வைத்தது யார்? மனமே, நீ தான் காரணமா?
என்ன கொடுமை... இவனுக்கு இப்படி ஒரு  சோதனையா...  சசிட்டு குருவி போல் சிறகை அடித்து பறந்தானே...
பட்டாம்பூச்சி போல வண்ணமாய் திகழ்ந்தானே....
முயல் போல ஓடி திரிந்தானே...
இவனுக்கு என்ன ஆயிற்று?
மனமே, காதலுக்கு முன் கம்பீரமாக கருத்து யுத்தம் செய்தாயே, இப்பொழுது ஏன் மௌனம் சாதிக்கிறாய்... பதில் சொல்
அன்றே சொன்னேனே உன் பேச்சை கேட்க வேண்டாம் என்று... அய்யோ...."  


எப்படி பேசும்... உயிரோடு இருந்தால் தானே... மனதிற்கு  காதலின் மீது காதல் இருந்தது... இவனுடைய காதல் என்று இறந்ததோ அன்றே தன்னை கிழித்து கொண்டு உயிரை விட்டு விட்டது மனம்...

மனதின் காதல் வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ஆட்சி ஏற்றது அறிவு... மனதின் நினைவுகளோடு...
அட... அறிவிற்கும் மனம் மீது காதல் போலும்...


No comments:

Post a Comment