Sunday, February 1, 2015

முரண்

               
ஊரே நிசப்தம் ஆகிப் போன
பின் இரவில்
ஏதோ ஒரு வீட்டில் 
ஏதோ ஒரு நாய்
திடீரென்று தெருவில் போகும் ஒருவரை பார்த்துக் குரைக்கிறது.  
“நடு ராத்திரி ஆகியும் கூட
தூங்காம காவல் காக்குதே” என்ற நிம்மதியில்
திரும்பக் கண் அயர்கின்றனர் வீட்டில் உள்ளவர்கள்
தூங்குவதற்கு.

நாய் பார்த்து குறைத்த மனிதன் போதையில்
நடந்து செல்லும் பாதையை
மறந்துவிடும் கனத்தில் 
அவன் வீட்டில் ஓர் உயிர் கண்கள் சொக்கி விழ,
“நடு ராத்திரி ஆகியும் கூட
வீடு வந்து சேரலயே இந்த ஆளு” என்று எண்ணி
பதறி எழுந்துக் கண்களை துடைத்துக் கொள்கிறது
விழித்திருப்பதற்கு...
-மகா.

1 comment: