Saturday, January 31, 2015

இறப்பது மேல்!!!


தடால் என்று அடித்த பிரேக்கில்
திணறிட்டு எழுந்து
தூக்கம் கலைந்த விவரம் தெரியும் முன்னே,
ஆடு அடியில மாட்டிக்கிச்சுப்பா
என்று ஓட்டுனர் நடத்துனரை பார்க்க
“நம்ம வண்டில தானா மாட்டனும்?
என்று ஆதங்க பட்டுக் கொண்டு இறங்கிய நடத்துனரோடு
இருவர் சேர்ந்து இழுத்து விட்டனர்
ஆடு ஒன்றை.   
கால் முறிந்து, கண் செருகி, வாயில் ரத்தம் தள்ள
உயிர் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது,
போராடுவதை விட இறப்பது மேல் எனத் தோன்றிற்று.
“நாய் தோரத்திட்டு வந்ததால  
ஓடி வந்து விழுந்துடுச்சி
என்று சொல்லி முகத்தை சுளித்துக் கொண்டு
ஓட்டுனர் பேருந்தை நகர்த்தினார்
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.
நாயிடமிருந்து தப்பிப்பதாய்
எண்ணிக் கொண்டு
மனிதர்களிடம் சிக்கியது ஆடு.  
பிழைக்க வழியே இல்லை
பாவம்...
-மகா.



No comments:

Post a Comment