எழுதிக் கொண்டிருந்தேன்
மை இல்லா பெனாவால்.
ஒரு பத்தி எழுதி முடித்ததும்
மேலே பார்த்தேன்.
என் கண்களுக்கு என்னவோ
நன்றாகவே தெரிந்தது
நான் எழுதிய எழுத்துக்கள்.
தாளில் அச்சு விழுந்தது,
மையின் சுவடு பதியவில்லை.
நான் எழுதி உள்ளேன்
என்பதை எவரும் நம்ப தயாராக இல்லை.
ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
மை இல்லை என்பதற்காக
என் எழுத்துகளுக்கு
உயிர் இல்லை என்று அர்த்தம் இல்லை.
அது ஏனோ தெரியவில்லை,
மை இல்லாப் பெனாவின் எழுத்துகளை
எவரும் எழுத்தாகவே ஏற்பதில்லை.
இதற்காக தானோ என்னவோ,
பெரும்பாலானோர் தங்கள் தாள்களை
மை கொண்டு நிரப்பவே விரும்புகின்றனர்.
அந்த பெருங்கூட்டத்தின்
சிறு மூலையில் அமர்ந்து கொண்டு
என்னை போன்ற சிலர்
மை இல்லா பெனாவால்
எழுதி கொண்டு தான் உள்ளனர்,
பதித்து கொண்டு தான் உள்ளனர்.
மை இல்லாமையால் வறுத்தப் படாமலும்,
மை உள்ளோரைக் கண்டு ஏளனம் பேசாமலும்.
-மகா.
No comments:
Post a Comment