என் வீட்டு மாடியில் கொத்து கொத்தாக பூத்திருக்கும் 
மஞ்சள் பூக்களை ரசித்து கொண்டிருந்தேன்,
ஏனோ தெரியவில்லை இப்பூக்களை பார்க்கையில் 
தனி பரவசம் மனதில் எழுகிறது… 
இதற்கு காரணம் அந்த பூக்களின் அழகா 
இல்லை அதனை காணும் என் கண்களின் ரசனையா 
என விளங்க
வில்லை...
அருகில் சென்று ரசிப்போம் என எண்ணி அருகில் சென்றேன்... 
ஒரு பூவின் உள்ளிருந்து தேனி ஒன்று வெளியே வந்தது, 
அது அனைத்து பூக்களின் உள்ளும் அற்புதமாக ஊடுருவி, 
பூவுக்கும் வலிக்காமல், தனக்கும் வலிக்காமல் தேனெடுத்து கொண்டிருந்தது...
அதை காணும் போது 
காதலன் காதலிக்கு கொடுக்கும் 
இரகசிய முத்தம் போல் தோன்றியது...
தேனெடுக்கும் வித்தை தெரியாததாலோ என்னவோ, 
பூக்களின் மீதான என் காதல் பூக்களுக்கு தெரியாமலே போகிறது... 
மற்றுமொரு காதல் தோல்வி!!!

No comments:
Post a Comment