கொட்டென்று கொட்டிய மழைதனில் 
திளைத்த பூக்களை, 
சட்டென்று முத்தமிட ஆசை... 
சில்லென்று வீசும் காற்றின் இன்பத்தை 
என் சொல் கொண்டு உணர வைக்க ஆசை... 
நான் எழுதும் கவிதைகளை 
நால்வரேனும் படித்து, 
மூவரேனும் திளைத்து, 
இருவரேனும் சிந்தித்து, 
ஒருவரேனும் உணர ஆசை.... 
மழலையின் சிரிப்பிற்காக 
மலைகளை குடைய ஆசை... 
மனம் விட்டு சிரிக்கும் தருணம் 
தினம் பெற்று மகிழ ஆசை... 
பறக்கும் பட்டாம்பூச்சியின் பின்னே சென்று 
அதன் சுதந்திரத்தை ரசிக்க ஆசை... 
கடற்கரையில் அமர்ந்து 
என் கவிதைகளை படிக்க ஆசை... 
என் புலம்பல்களை படித்து படித்து 
அதன் அழகில் சிரித்து மகிழ ஆசை... 
-ஆசைகள் பிறக்கும்
-மகா 
குறிப்பு: மனிதனின் ஆசைகள் அளவற்றது... நானும் மனித சாயல் கொண்டவன் ஆதலால் என் ஆசை கவிதையும் அளவற்றது... இது தொடர்ந்து கொண்டே போகும்... 
No comments:
Post a Comment