வெண்ணிலவு சென்று தினம் வெள்ளை நிலா சோறு ஊட்டினாள் அன்னை,
கண்ணுறங்கும் வேலை வரை கதை கூறி சீராட்டினாள் அக்கா, 
கல்வி தனை கண்ணாக போற்ற வேண்டும் என்று உணர
வைத்தாள் ஆசிரியை, 
வாழ்வில் உணர்வுகளுக்கு விளக்கம் கொடுத்தாள்
தோழி, 
அவற்றிர்க்கு உயிர் கொடுத்தாள் காதலி, 
மொழியில் கூட தாய் மொழியே சிறந்தது, 
ஆறுகள் கூட பெண்ணின் பெயர் கொண்டே சேவை புரிகிறது...
பெண்ணே, உனக்கு இதனை பரிணாமமா? 
பெண் என்ற ஒருத்தி இல்லாமல் போய் இருந்தால் 
மனிதர்கள் மனிதர்களாக இருந்திருக்க முடியுமோ?
-மகா 
No comments:
Post a Comment