Monday, March 30, 2015

அழைத்து செல்ல மாட்டாயா...

இரயில் நிலயம் வந்ததும்
கதவோரம் காலியான இடத்தில்
சென்று நின்று கொண்டான்
நீல நிற சட்டை காரன்.

வண்டி கிளம்பியதும்
எதிர் திசையில் வீசிய காற்றை
ரசிப்பவனாய் கண் மூடி சிரித்து கொள்கிறான்,
சற்றே  சிலிர்த்து  கொள்கிறான்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவனை போல
ஆயுத்த படுத்தி கொண்டிருக்கும்போது
சட்டென்று திரும்பி பார்க்கிறான்
இரயிலில் கூவி கூவி புத்தகம் விற்பரவின்
குரலை கேட்டு.

'1212 கேள்விகள், 1212 பதில்கள்,
இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
இந்தியாவில் எத்தனை ஆறுகள் உள்ளன?
பாம்பில் எத்தனை வகை உள்ளது?
குரங்கில் எத்தனை வகை உள்ளது?
மனித உடம்பில் எவ்வளவு இரத்தம் உள்ளது?
இப்படி 1212 கேள்விகள், 1212 பதில்கள்
வெறும் 20 ரூபாய்க்கு'

இவனை போலவே அங்கிருந்த எவருக்கும்
1212 பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ ,
அந்த மனிதனின் ஒரு வேலை சாப்பாட்டிற்கு
வழி செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எழுந்ததற்கு
எந்த வித அறிகுறியும் இல்லை.

யாரும் ஏறெடுத்து கூட பார்க்க மருதத்தை
சிறிதும் பொருட் படுத்தாதவறாய்
அடுத்த பெட்டிக்கு இறங்கி ஓடுகிறார்
1212 பதில்களை ஒருவருக்கேனும்
ஊட்டி விட வேண்டும் என்ற வைராக்யாத்தோடு.

நீல நிற சட்டை காரன் இறங்கி சென்றதை கவனிக்காது
அந்த புத்தகம் விற்பவரை பற்றி எண்ணி கொடிருந்தேன்.

இரயில் கிளம்பியது.
சட்டென்று முந்தியடித்து கொண்டு
ஓடும்  இரயிலை விட்டு இறங்கி
அந்த நீல சட்டை காரணிடம் ஓடி ஒட்டி கொண்டேன்,
இறங்கும் பொது உன் 'மனசையும்' சேர்த்து
அழைத்து செல்ல மாட்டாயா என்று கடிந்து கொண்டே.

                  -மகா 



 

No comments:

Post a Comment