என் குளியல் அறையின் குழாயிலிருந்து
தண்ணீர் சோட்டிக் கொண்டே
இருக்கிறது.
அதன் சத்தம் என்னை நெருடி
கொண்டே இருக்கிறது.
சில சமயம் குழாயின் பக்கம் அமர்ந்து
அது சொட்டுவதை பார்த்துக் கொண்டே
இருந்து விடலாம் என தோன்றும்.
ஆறுதலாக நானேனும் இருக்கேனே
என்று
அதற்குத் தெரியலாம் அல்லவா?
இரவு முழுவதும் விடாமல்
அந்தக் குழாய் சிந்தும் துளிகளால்,
ஒரு குவளையே நிரம்பி விடுகிறது.
காலையில் சட்டென்று குளித்து
விட்டு வருவதற்கேற்ப.
சில குழாய்கள் இப்படி
சொட்டு சொட்டாக நிரப்புகின்றன.
சிலவை ஒட்டு மொத்தமாக
கொட கோடவென நிரப்பி தள்ளுகின்றன.
சொட்டும் குழாய்களை
பெரும்பாலும் எவரும் கண்டு
கொள்வதில்லை.
அதன் ஓசைகள் வெளி உலகில் பலருக்குக் கேட்பதே இல்லை.
என் குளியல் அறை குழாயின் ஓசையை
கண்டு கொண்ட வெகு சிலருள் நான் இருப்பது போல,
இங்கு சிலர்,
தங்கள் மனதின் ஓசையைக் கண்டு கொள்ளும்
அந்த வெகு சிலர் எங்கே உள்ளனர் என
ஐயப் பட்டு கொண்டே
குவளையை நிறப்பி வருகின்றனர்.
குவளையில் தண்ணிரை மொண்டு ஊற்றும் பாதிரமட நீ...
ReplyDelete